Sinhala Fonts Facebook

பனை அபிவிருத்திச் சபை (ப.அ.ச)

பனை அபிவிருத்திச் சபையானது 1971ம் ஆண்டின் 46ம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 1975ம் ஆண்டின் 24ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 18ம் திகதி ஆவணி மாத 1978ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மேலதிக தோட்டப் பயிர்ச் செய்கை அமைச்சின் கீழ் பனைசார் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். 2010ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்தது. அதன் பின்னர் 2015 ஜனவரி 08ம் திகதியிலிருந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்கீழ் மிகவும் சிறப்பாக தொழிற்பட்டு வருகின்றது.

பனை அபிவிருத்தி சபையின் பிரதான செயற்பாடுகளாக மாதிரிப் பண்ணைகளின் கைத்தொழிலை ஒழுங்கமைத்தல், நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி, கைவினைப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், பல்வேறு வகையான பனை உற்பத்திகளை உருவாக்கல், பனை உற்பத்திகளை ஊக்குவித்தல், உணவு பொருள் உற்பத்திகள் மற்றும் பிற உற்பத்திகளை அபிவிருத்தி செய்து, பிரிவுகள் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வதுடன்,  கற்பகம் விற்பனை நிலையங்களை முறையாக பராமரித்தல்.

எமது தூரநோக்கு

வளங்களையும் சூழலையும் அழியாமல் அதே வேளையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அர்த்தம் மிகுந்த பங்களிப்பை கொடுக்கும் பனைப் பிரிவை அபிவிருத்தி செய்வது.

எமது குறிக்கோள்

பனைக் கைத்தொழிலையும் பனை வளங்களையும் ஒழுங்குபடுத்தி அபிவிருத்தி செய்தலும் முன்னேற்றுதலும்.

சபையின் முன்னால் தலைவர்கள்

முதல் தலைவர்

அமரர் திரு. கே.சி நித்தியாநந்தா

(1970-1978)

பனையின் பயன்பாடுகள் ஒரே பார்வையில்

எமது நோக்கங்களும் இலக்குகளும்

பனையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உதவத்தக்க நிறுவன ரீதியான அடித்தளத்தை வழங்குதல்.

இலங்கையில் பனையை அடிப்படையாகக் கொண்ட தொழில் துறையின் நிலையான அபிவிருத்திக்கு நுண்ணிய, மத்தியதர, உயர்தொழில்நுட்ப மட்டங்களில் விஞ்ஞான ரீதியான சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்துதல்.

அடிப்படை உத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு வழிகாட்டத்தக்க பிரயோக ஆய்வுகள் மூலமாக பனைப்பயிரின் பாதுகாப்பு, பேணுகை, உற்பத்தி, அபிவிருத்தி என்பனவற்றுக்கான தொழில்நுட்பமுறைகளை அபிவிருத்தி செய்தல்.

ஒன்றிணைந்த அபிவிருத்தி முயற்சிகளை நோக்கமாகக் கொண்டு பனை மற்றும் கால்நடை அபிவிருத்தி என்பனவற்றினை மேம்படுத்தல்.

பனை அபிவிருத்திச் சபையின் மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பமுறைகளை இத்துறைசார்ந்து தங்கியிருப்போருக்கும் தொழிலதிபர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இடம் மாற்றுதல்.

பனை உற்பத்திக்குரிய வளங்களின் தேசிய களஞ்சியமாகச் செயற்படுதலும், பயிரிட உதவும் உபகரணங்களை சிறந்த முறையில் தயாரித்தலும்

To collate and disseminate technical information on Palmyrah along with popularized versions with practical applications.

பனையுடன் தொடர்பான நிறுவனரீதியான அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக உற்பத்தி முறைகளின் முகாமைத்துவத்தில் பல்வேறு தெரிவுகளை மேம்படுத்தலும் கிடைக்கச் செய்தலும்.

உந்துதல் துறைகள்

பனைவள அபிவிருத்தி

பயிற்சி மற்றும் தொழில்நுட்ப நியமிப்பு திட்டம் (கைவினை / சாறு மற்றும் பழம் உற்பத்தி / நார் பயிற்சி / மரவேலைப்பாடு பயிற்சி / பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள்)

பனைசார் உற்பத்திகளின் அதிகரிப்பு

கற்பக விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தல் வலையமைப்பை மேம்படுத்துதல்

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி

நிறுவன ரீதியான வலுவூட்டல்