Sinhala Fonts Facebook

மாவட்ட அடிப்படையிலான "கற்பகம்" சந்தைப்படுத்தல் விற்பனை நிலையங்கள்

சபையானது அதன் உள்ளக தயாரிப்புகளை மட்டுமன்றி, ஏனைய பனம்சார் உற்பத்தியாளர்களிடமிருந்தும் பொருட்களை கொள்வனவு செய்து “கற்பகம்" எனும் சந்தைப்படுத்தல் விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்துகிறது. அதன் நாடளாவிய பதினைந்து (15)  “கற்பகம்" எனும் பெயரில் விற்பனை நிலையங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா, புத்தளம், அம்பாந்தோட்டை மன்னார் மற்றும் மொனராலை ஆகிய பகுதிகளில் விற்பனை மேற்கொள்கின்றது.

யாழ்ப்பாணம்

நல்லூர், பருத்தித்துறை வீதி, நல்லூர்.
“கற்பகச்சோலை” சந்தைப்படுத்தல் பகுதி, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
இல. 645, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
இல. 129டி, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
பஸ் நிலைய அருகாமை, யாழ்ப்பாணம்.

கொழும்பு

வவுனியா

இல. 41, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு 06.
இல. 67/68, பஸார் வீதி, வவுனியா.

மன்னார்

ஹம்பாந்தோட்டை

மடு வீதி, மன்னார்.
பெரிய பஸார், மன்னார்.
New
புத்த விகாரைக்கு முன்னால், திஸ்ஸமஹாராம.

மட்டக்களப்பு

15, யு.டி.ஏ. கட்டிடம், மட்டக்களப்பு.
காட்சியறை, வெளிச்சவீடு, மட்டக்களப்பு.

புத்தளம்

ஹம்பாந்தோட்டை

புதிய பஸ் நிலைய அருகாமை, கற்பிட்டி.
புத்த விகாரைக்கு முன்னால், திஸ்ஸமஹாராம.

மொனராகலை

இல. 01, புதிய நகரம், கதிர்காமம். (காகில்ஸ் புட்சிட்டிக்கு அருகாமை)
NEW

துறைசார் அபிவிருத்திகள்

1. புனர்வாழ்வு அதிகாரசபையின் கீழ் சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சின்கீழ் புனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழிற்கடன் திட்டத்தின் பயனாளிகளான மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் எனும் பெயரிலான கண்காட்சி 2018 மே மாதம் 25ம் திகதி சங்கிலியன் தோப்பு நல்லூர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சின் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் (பா.உ) அவர்களால் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி.கலாநிதி. பொன்னையா சுரேஸ் அவர்களின் பங்குபற்றுதலுடன் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பனை அபிவிருத்திச் சபை தனது சந்தைப்படுத்தல் பிரிவின் ஊடாக இக்கண்காட்சி விற்பனைக்கு அதன் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தியது.

2. மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் திணைக்களத்தின் ஒருங்கிணைப்புடன் புதிய கற்பகம் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
3. மாவட்ட ரீதியான அபிவிருத்தியாக மொனராலை மாவட்டம் கதிர்காமத்தில் புதிய கற்பகம் விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
4. கனடாவுக்கு பனைசார் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு ஏற்றுமதியாளருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
5. ஏற்றுமதி தரத்திலான பனையோலை கைப்பணித் தயாரிப்பு பிரிவு நிறுவப்பட்டது:
6. சபையின் பனைசார் தயாரிப்புகள் லண்டனில் "பழங்குடி இந்தியன் பெஸ்ட்" நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
7. "லண்டன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் - 2017" நிகழ்ச்சியில் பனை அபவிருத்திச் சபையின் பனைசார் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன
8. கற்பக விற்பனை நிலையங்களை நவீனமயமாக்கல்:

விற்பனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக கற்பக விற்பனை நிலையங்களில் உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்காக கொண்டோலா மற்றும் காசு மற்றும் இருப்பு பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டன

9. பனைசார் உற்பத்திகளின் ஏற்றுமதி செயற்பாட்டிற்காக வெளிநாட்டினருடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
10. சந்தையில் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பனம் யோகட், பனம் ஐஸ் கிரீம் & பனம் பிஸ்கட்

11. காசு மற்றும் இருப்பு பதிவு இயந்திரத்தின் நிறுவல்:

கற்பக விற்பனை நிலையங்களில் ஊழியர்களுக்கான பயிற்சியளிக்கப்பட்டது.

தொடர்புக்கு

சந்தைப்படுத்தல் பிரிவு

☏ +94 21 221 5017

? +94 21 221 5018

✉pdbmarketing@yahoo.com