Sinhala Fonts Facebook

இலங்கையிலுள்ள மூல வளங்களுள் சூழலோடு இசைந்த கைத்தொழில்களுக்கு மக்களால் அதிக பயன்பாட்டுக்கு உள்ளீர்க்கப்பட்ட மூலவளமாக பனைவளம் காணப்படுகின்றது. இதன் பழத்திலிருந்து பெறப்படும் பனங்களியிலான பனாட்டு, பதநீரிலிருந்து பெறப்படும் பனைவெல்லம், பனையோலையினால் பின்னப்படும் பெட்டி, பாய், கடகம் மற்றும் பனை மரத் தளபாடங்கள் போன்றவை அன்றிலிருந்து இன்றுவரை விரும்பி உண்ணப்பட்டும், அத்தியவசிய பாவனைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றது.

தூரநோக்கு

சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உடலுக்கும் அதிக நன்மை பயக்கும் பனைசார் உற்பத்திகளை மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தல் மற்றும் பனைவளம்சார் சுயபொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்தல்.

குறிக்கோள்

பனையினை மூலப்பொருளாகக்கொண்டு சுயதொழில் அபிவிருத்தியை மேம்படுத்தல்.

செயற்பாடு

பனைசார் பயிற்சி வழங்குதலினூடான பனைசார் துறையினை விரிவாக்கம் செய்தல்.

2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பகுதிச் செயற்பாடுகள்
பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் பெண்கள்
பனங்கைப்பணிப் பயிற்சி பயிலுனர்கள் 872
பனங்கைப்பணி உற்பத்தியாளர்கள் 1237
பனங்களிப் பயிற்சி பெற்றவர்கள் 100
பனைநார் பயிற்சி பெற்றவர்கள்  30
பதநீர் பயிற்சி பெற்றவர்கள்   15

பனங்கைப்பணிப் பயிற்சித் தரவு - 2017

இல மாவட்டம் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை பயிற்சியாளர்களின் எண்ணிக்கை உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை கருவிகள் மற்றும் உபகரணங்களின் எண்ணிக்கை
01 யாழ்ப்பாணம் 05 87 82 54
02 கிளிநொச்சி 03 51 51 46
03 முல்லைத்தீவு 02 63 312 30
04 வவுனியா 02 50 49 28
05 மன்னார் 03 39 42 45
06 புத்தளம் 02 35 26 43
07 திருகோணமலை 04 117 51 40
08 மட்டக்களப்பு 10 221 581 73
09 அம்பாறை 05 107 43 40
10 அம்பாந்தோட்டை 02 38 05
11 குருநாகல் 01 24 05
12 அநுராதபுரம் 01 40 05
மொத்தம் 40 872  1237 414

துறைசார் அபிவிருத்திகள்

1. பனைசார் உணவு பயிற்சியும் கருத்தரங்கும் – 2018.04.27

சிங்கைநகர் கிராமத்தில் விரிவாக்கல் பகுதியினால் 30 யுவதிகளுக்கு பனைசார் உணவு பயிற்சியும், தரச்சான்றிதழ் பெறுவதற்கு உரிய நடைமுறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கும், உற்பத்திப்பகுதியினால்  பனை வெல்லத்துடன் பிரதேச தானியங்களும் சேர்த்த, ஊட்டமிகு உணவு உற்பத்தி செய்முறைகளும் சிங்கைநகர் விடிவெள்ளி மாதர் மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதன் வளவாளர்களாக பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி உத்தியோத்தர் திருமதி மேரி, ஆராய்ச்சி உதவியாளர் செல்வி கிளனிஸ்டா, உற்பத்தி பகுதியிலிருந்து திரு. க.சுதாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கணினி பொறி மூலம் காணொளியூடாக விளக்கங்களும், பனைசார் உணவு செய்முறையும் விரிவாக்கல் முகாமையாளர் திரு.கா.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முன்னெடுப்பில்  நிகழ்த்தி காட்டப்பட்டன.

இச் செயற்பாடினால் பயிற்றப்பட்ட பனைவெல்ல எள்ளுப்பாகு, சிறுபயறு பனைவெல்லம், இஞ்சி பனைவெல்லம், எள்ளுப் பனைவெல்லம் என்பன சிறப்பாக தயாரிக்கப்பட்டன. இப் பயிற்சி பெற்ற பெண்கள் குழுக்களாக இவ் உற்பத்தியினை மேற்கொள்ள உள்ளனர்.

2. பனங்கைப்பணியாளருக்கான விசேட தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது

வட வரணி பனங்கைப்பணியாளருக்கான விசேட தொழில்நுட்ப பயிற்சி 2018.04.04ம் திகதியன்று வளவாளராக திருமதி. பவானி தங்கத்துரை அவர்களால் பனைசார் துறையில் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பெண்கள் தலைமைத்துவ குடும்ப உறுப்பினர்கள் 23 பேருக்கு பயிற்சிக்கான விரிவுரை வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வினை தொடர்ந்து விரிவாக்கல் முகாமையாளர் திரு. கா. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பனைசார் உற்பத்தியாளர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், இச்சங்கத்தில் பனைசார் உற்பத்திகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுமெனவும், இதன் மூலம் மேற்கொள்ளப்படும் தரமான உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை சபையினால் ஏற்படுத்தி தரப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

3. உபகரணம் வழங்கல் - 2017 -வல்லிபுரம், மறவன்புலோ, அல்லைப்பிட்டி பனங்கைப்பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கல்

4. போதனாசிரியர் வதிவிட தொழில்நுட்பப் பயிற்சி

5. பனங்களிப் பயிற்சி

6. பனம் உணவுப் பயிற்சி

7. பனைநார் பயிற்சி

8. போதனாசிரியர் வழிகாட்டி வெளியீடு

புதிய தொழில்நுட்பத்துடனான பனங்கைப்பணி வடிவமைப்புப் பொருட்களுள் சில

தொடர்புக்கு

விரிவாக்கல் பிரிவு

☏ +94 21 222 2034 நீ.இல: 205

? +94 21 222 4154

✉ slpdbho@yahoo.com

 ✉ extensionpdb@yahoo.com