பணிப்பாளர் சபை
1971 ஆம் ஆண்டின் 46ம் இல, தென்னை அபிவிருத்திச் சட்ட மூலம் மற்றும் 1975ஆம் ஆண்டின் 24ஆம் இல திருத்தச் சட்ட மூலம், 2003ஆம் ஆண்டின் 40 ஆம் திருத்தச் சட்ட மூலம் என்பவற்றின் கொள்கைகளையே பனை அபிவிருத்திச் சபை பின்பற்றுகின்றது. பணிப்பாளர் சபை 9 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், கௌரவ அமைச்சர் அவர்களால் நியமிக்கப்படுவதாகவும் அமையும். நிதி அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சரின் பிரதிநிதியாக நியமிக்கப்படும் உறுப்பினரே நிதிக்குப் பொறுப்பானவராக அமைவார். ஏனைய 8 உறுப்பினர்களுள் ஒருவர் கௌரவ அமைச்சர் அவர்களால் தலைவராக நியமிக்கப்படுவார்.
பணிப்பாளர் சபைக் கூட்டங்கள்
சபைக் கூட்டங்கள் முக்கியமான கொள்கைகள்இ நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ விடயங்களை ஆராயவும், தீர்மானிக்கவும் ஒவ்வொரு மாதமும் கூடுகின்றன.
கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக்குழு
இக்குழுவில் கணக்காய்வு முகாமைத்துவக்குழுப் பணிப்பாளரின் தலைமையின் கீழ் சுயேச்சையான நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பிரதி நிதிப்படுத்தும் திறைசேரி நாயகம் உட்பட இன்னும் வேறுநிறைவேற்று அதிகாரமற்ற இரு பணிப்பாளர்கள் இடம் பெறுவர்.
அழைப்பாணையின் பேரில் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.
கணக்காய்வு முகாமைத்துவக் குழு ஏனைய நடவடிக்கைகள் உட்பட உள்ளகக் கட்டுப்பாட்டு முறை இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் சட்டவிதிகளின் தேவைக்கு இணக்கமாக செயற்படுதல் ஆகிய அம்சங்களை மீளாய்வு செய்கிறது.