அபிவிருத்தி – Palmyrah Development Board – Sri Lanka

Sinhala Fonts Facebook

பனை வள அபிவிருத்தி

பனைமரமானது அரக்கேசியா (Arecaceae) எனும் தாவரக் குடும்பத்திலுள்ள பொராசஸ் (Borassus) என்னும் தாவர இனத்தை சார்ந்ததாகும். பனை மரமானது தெற்கு ஆபிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியாவின் வடக்குப் பகுதி போன்ற இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றது.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்ற பனைமரங்களின் எண்ணிக்கைகள்  முறையே 80,11,10 மற்றும் 02 மில்லியன்களிலாகும்.

இலங்கையில் பனை மரத்தின் பரம்பல் விபரம்:

மூல ஆதாரம்: ப.அ.சபையின் ஆண்டு அறிக்கை – 2016

மாதிரிப் பனந்தோட்டங்கள்

மாதிரிப் பனந்தோட்டங்களானது சாத்தியமான ஊடுபயிர்களுடன் கூடிய பெரியளவிலான பனைப்பயிர்ச் செய்கைப் பண்ணைகளாகும். இவை பொதுமக்களுக்குப் பனைப்பயிர்ச் செய்கை தொடர்பான ஆர்வத்தினை ஏற்படுத்துவதுடன், பாவணையற்ற காணிகளினை வினைத்திறனுடைய முறையில் பாவிப்பதற்குரிய மாதிரியை விளங்கப்படுத்தக்கூடியனவாகவூம் அமைந்துள்ளன. உண்மையில்  மாதிரிப் பனந்தோட்டங்கள் பனை சார்ந்த கைத்தொழில் துறைக்குரிய ஒரு நீண்ட கால முதலீடுகளாகும். கீழ் குறிப்பிட்டவற்றில் பெரும்பாலான மாதிரிப்பனந்தோட்டங்கள் வடலிப்பருவப்பனைகளை கொண்டிருப்பதனால், அவற்றில் இருந்து தற்போது வருமானம் ஈட்டுவது என்பதனை எதிர்பார்க்க முடியாதாக உள்ளது. இருப்பினும் எதிர்காலத்தில் இவற்றிலிருந்து சிறந்த வெளியீடுகளை பெறுவதாயின் இப்பனந்தோட்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருதல் அவசியம் தற்போது மாதிரிப்பனந்தோட்டங்கள் பனம் பாத்தி போடுதல், நாற்று உற்பத்தி மற்றும் ஊடுபயிர்ச் செய்கை என்பவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

2016 இல் பனை அபிவிருத்திச் சபையின் முகாமைத்துவத்தின்கீழ் செயற்பட்டுவரும் மாதிரிப்பனந்தோட்டங்களின் விபரம் பின்வருமாறு:

மாவட்டம் அமைந்துள்ள இடம் பிரதான பயிர்கள்
யாழ்ப்பாணம் மாமுனை இளம் பனையும், மரமுந்திரிகையும்
நெடுந்தீவு இளம் வடலிகள்
குடத்தனை இளம் வடலிகள்
வவுனியா புளியங்குளம் இளம் பனைகள், முதிர்பனைகள், எலும்பிச்சை, தோடை மற்றும் பழமரங்கள்
கிளிநொச்சி ஊற்றுப்புலம் இளம் வடலிகள்
கௌதாரிமுனை இளம் வடலிகள்
முழங்காவில் இளம் வடலிகள்
அம்பாந்தோட்டை வீரவில பனை, வாழை மற்றும் எள்ளு போன்ற ஆண்டுத்தாவரங்கள்

துறைசார் அபிவிருத்திகள்

தொடர்புகளுக்கு

அபிவிருத்தி பிரிவு

DEVELOPMENT DIVISION

☏ +94 21 222 2034 நீ.இல: 206

? +94 21 222 4154

✉ slpdbho@yahoo.com