நிர்வாகம், நிதி மற்றும் உள்ளக கணக்காய்வு – Palmyrah Development Board – Sri Lanka

Sinhala Fonts Facebook

நிர்வாகம்

நிர்வாகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட ஒழுங்குமுறைகளையும் பேணுவதுடன், சபை பணியாளர்களின் நலனையும்​ கருத்தில்கொள்கின்றது. இப்பிரிவினூடாக பணிப்பாளர் சபைக் கூட்டத்தை நடத்தப்பட்டு, அச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

துறைசார் அபிவிருத்திகள்

1. 5S திட்டம்: காரியாலய செயல்பாட்டு நடவடிக்கைகளை சுலபமாக பூர்த்தி செய்யும் முறையை ஒழுங்குபடுத்துதலாகும். இதற்காக 5S திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், பணியாளர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

2. கொள்முதல் நடைமுறைகள் பற்றிய பயிற்சி: அனைத்து பணியாளர்களுக்கும் கொள்முதல் நடைமுறைகளுக்கான அடிப்படை அறிவை வழங்குவதற்கு பயிற்சியளிக்கப்பட்டது.

3. கைதடி வளாகத்தில் புதிய பனைசார் பயிற்சி நிறுவன உருவாக்களுக்கான (PTI) கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது பனைசார் உற்பத்தி மற்றும் பனை ஆராய்ச்சி அடிப்படையிலான ஒரு வருட டிப்ளமோ நிலை பாடநெறியை வழங்கும் ஒரு நிறுவனமாக தொழிற்படவுள்ளது.

4. சபைக்கான மாநாட்டு மண்டபம் கைதடி வளாகத்தில் திறக்கப்பட்டது: பயிற்சி திட்டங்கள் ஏற்பாடு செய்வதுடன், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விரிவுரைகளும் நடாத்தப்படும்.

5. கள விஜயம் மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்: பனை அபிவிருத்தி சபையின் முதற் தடவையாக, அனைத்து உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் ஒன்றிணைந்து திறன் அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டனர்.

6. திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் பிரிவை ஸ்தாபித்தல்: திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அலகு புதிதாக அமைக்கப்பட்டதுடன், கொள்முதல் நடவடிக்கைகள், மூலதன நிதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்திற்கான திட்டமிடல் ஆகியவை இப்பிரிவின் கீழ் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது.

7. சிங்கள மொழிதிறன் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்: நிர்வாகப் பிரிவினரால் பணியாளர்களுக்கான மொழி பரிமாற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இப் பயிற்சி வழங்கப்பட்டதுடன், இதன் மூலம் பஙகேற்ற பணியாளர்கள் 15 பேர் சிறந்த பயனை அடைந்தனர்.

8. கணினி மூலமான அடிப்படை பயிற்சி திட்டம்: சபையின் பணியாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கு கணினி மூலமான பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

9. இணையதள அபிவிருத்தி திட்டம்: சபையின் புதிய உத்தியோகபூர்வ இணையத்தள அபிவிருத்தி திட்டம் Sparkgrid (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு

நிர்வாக மற்றும் மனிதவள முகாமைத்துவப் பிரிவு

☏ +94 21 222 2034 2034 நீ.இல: 209 & 202

? +94 21 222 4154

✉ slpdbho@yahoo.com

நிதி

பனை அபிவிருத்தி சபையின் அனைத்து கணக்குகளும் நிதிப் பிரிவினரின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரிவினால் அனைத்து பிரிவினரின்

கணக்குகளுக்குமான பணக்கொடுக்கல், வாங்கல் இடம்பெறுகின்றன. சபையின் மாதாந்த, காலாண்டு மற்றும் இறுதி கணக்குகளை தயாரித்தல் ஆகியன நிதிப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

துறைசார் அபிவிருத்திகள்

1. நிதிப் பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2. கணக்கீட்டு நடைமுறைகளைப் பற்றிய பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

3. நிதி கட்டுப்பாடுகளை பராமரிப்பதற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

4. கணக்குப் பற்றாக்குறைகள் சரி செய்யப்பட்டதன் விளைவாக, கணக்காய்வாளர் திணைக்களத்திலிருந்து உறுதிபடுத்தப்பட்டு மற்றும் நேர்மையான அறிக்கை கிடைத்துள்ளது.

தொடர்புக்கு

நிதிப் பிரிவு

☏ +94 21 222 2034 2034 நீ.இல:212

? +94 21 222 4154

✉ slpdbho@yahoo.com

உள்ளக கணக்காய்வு

உள்ளக கணக்காய்வு பிரிவு சபையின் முழு கணக்குகள் ஆய்வுசெய்வதுடன் மற்றுமன்றி கற்பக விற்பனை நிலையங்கள், களஞ்சியசாலைகளையும் கண்காணிப்பு செய்து உடனுக்குடன் அவ்வறிக்கைகளை சபைத் தலைவருக்கு சமர்ப்பிக்கின்றது.

துறைசார் அபிவிருத்திகள்

1. பனை ஆராய்ச்சி நிறுவனம் 2012 இல் நிறுவப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு உள்ளக கணக்காய்வு தொடங்கப்பட்டது.

2. 2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு வினவல்கள் முழுமையாக பதிலளிக்கப்பட்டுள்ளதுடன், குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

3. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளக கணக்காய்வு முறைமையினால் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

☏ +94 21 222 2034 2034 நீ.இல:207

? +94 21 222 4154

✉ slpdbho@yahoo.com